Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, September 09, 2018

யாழில் தொடரும் மர்மகும்பல்களின் அட்டகாசம் ; நான்கு வீடுகளுக்கு தீ வைப்பு!

Currently online
யாழ்ப்பாணம், நவாலி அட்டகிரி பகுதியில் நேற்று நான்கு வீடுகள் மற்றும் ஐஸ்கிறீம் விற்பனை வாகனம் என்பன மர்மகும்பல்களினால் தீக்கிரையாக்கட்டுள்ளன.

இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டகிரி பகுதியில் முகத்தினை மறைத்தவாறு வீடுகளுக்குள் புகுந்த வன்முறை கும்பல், வீட்டில் இருந்த உடமைகளை சேதப்படுத்தி, வீடுகளுக்கு தீ வைத்ததுடன், ஒரு வீட்டில் நின்ற ஐஸ்கிறீம் விற்பனைக்கு பயன்படுத்தும் வாகனத்தையும் தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இலக்க தகடுகள் மறைக்கப்பட்ட எட்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பலே இந்த செயலை முன்னெடுத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.