Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, September 07, 2018

அனிதாவை தொடர்ந்து நீட் தேர்வால் மீண்டும் ஒரு மாணவி பலி!

Currently online
நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பினை இழந்து பொறியியல் கல்லூரியில் இணைந்து படித்து வந்த சென்னையை சேர்ந்த மாணவி ஸ்ருதி இன்று தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சென்னை - சோலையூரை சேர்ந்த மாணவி ஸ்ருதி நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் பொறியியல் கல்லூரியில் இணைந்து படித்து வந்த மாணவி மருத்துவம் படிக்கும் வாய்ப்பினை இழந்த ஸ்ருதி இன்று தற்கொலை செய்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத்தேர்வினை கட்டாயப்படுத்தியது முதல் தமிழக அரசு பாடத்திட்டத்தின் வழி படித்து அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ந்திருந்த போதிலும், நீட் நுழைவுத்தேர்வுக்கான கோச்சிங் வகுப்புகளில் சேர்ந்து நீட் தேர்வுக்கு தயாரிக்க இயலாத மாணவர்கள் கண் முன்னே தங்களது கனவு சறுகாவதினை காணப்பொறுக்காமல் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.