
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் விதுகம பகுதியை சேர்ந்த 37 வயதுடைய கீத் மங்கள பெரேரா என்பவரே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஹேன்யாய பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரை முந்தலம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து கல்கடஸ் ரக துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் நீண்ட காலமாக பிரச்சினை இருப்பதாகவும் அதன் பிரதிபலிப்பாகவே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தலம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.