Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, September 03, 2018

யாழில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Currently online
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் அறைக்குள் உறங்கிக்கொண்டிருந்தவர் மீது சாரைப்பாம்பு விழுந்த சம்பவத்தால் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ். அராலிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது அறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டு கூரையிலிருந்து அவர் மீது ஏதோவொன்று விழுந்தது.

இதனையடுத்து அவர் என்ன விழுந்ததென்று பார்த்தபோது நன்கு கொளுத்த பாம்பு ஒன்று அவர் உடலில் நெளிந்தவண்ணம் இருந்துள்ளது.

உடனடியாக பதறியடித்து எழுந்தவர் பாம்பை உதறிவிட்டு கூக்குரலிட்டவேறே அறையை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஏனையோரும் துடிதுடித்து எழுந்து என்னவென்று பார்ப்பதற்காய் மின்விளக்குகளைப் போட்டுள்ளனர்.

வாயில் எலி ஒன்றை அரைவாசி விழுங்கிய நிலையில் சாரைப் பாம்பு ஒன்று அறையில் அசையமுடியாமல் இருந்துள்ளது.

எவ்வாறாயினும் பாம்பை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக குறித்த இளைஞர் கூறினார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.