Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, September 09, 2018

அவன் நினைவுளில் ஓர் நீண்ட பயணம்...!

Currently online
வெளிச்சங்களற்ற ஓர் குளிர்அறை யொன்றினுள் குறுகி அமர்ந்த படி 
பெருகி வழியும் கனத்த மெளனத்தை வெறுமனே வேடிக்கை பார்கிறேன்.

ஆதித்யா நீ எங்கிருக்கின்றாய்.
அருகினிலா? அல்லது தொலைவினிலா?
தொலைவினில் எத்தனை தூரம் ?
இந்தக்கணங்ளில் என்ன செய்து கொண்டிருப்பாய்.

இதே போல இருளும் குளிரும் நிறைந்த
அறையினில் அமைதியாய் தூங்கிக்கொண்டு !
அல்லது ஏதோவோர் புத்தகத்தின் எத்தனையாவது பக்கத்துடனோ தர்க்கித்துக்கொண்டு !
அல்லது சிந்திப்புகளற்ற பெரும் மௌனம் வாய்க்கும் தருணங்கள் குறித்து
பெருமையாய் சிந்தித்துக் கொண்டிருக்கலாம்.
எதுவானால் என்ன ?

நீ வாழ்கிறாய் வாழும் கலையை கற்றறிந்தவன் நீ !
கற்றறிந்தவற்றை மற்றவங்களுக்கு கற்றுக்கொடுப்பதில் வள்ளலும் நீ !

உன்னைப் பற்றி எதுவும் தெரியாமல்
தெரிந்து கொள்ள விரும்பாமல் உன்னில்
இருந்து விலகியும் விலகாமலும் உன்னுடனான தேடல்களிலேயே நாட்களை
கடத்திக்கொண்டிருப்பது 
எனக்கு அலாதிப் பிரியமெனவும் ,

என் கனவுப் பள்ளத்தாக்கில் உன் ஞாபகங்கள் முகாரி இசைக்க காற்றோடு ஊடல் கொண்ட கற்பூரமாய் எனக்கான இரவு பகல் கரைந்து கொண்டிருப்பதையும் அறிவாயோ ?
ஆதித்யா!

தொடரும் கவிதையாய்....


            நன்றி 
கவிப்பிரியை சுஜனி

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.