Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, September 02, 2018

மன்னார் கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப்பொருள் ; ஒருவர் பலி மூவர் படுகாயம்!

Currently online
மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருளை எடுத்த மீனவர் ஒருவர் அதனை சோதனைக்குட்படுத்திய போது குறித்த மர்மப்பொருள் வெடித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து படகு ஒன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இதன் போது பள்ளிமுனை- நாச்சிக்குடா கடற்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளை குறித்த மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

இதன் போது ஜேசு ரஞ்சித் (வயது-39) என்ற மீனவர் குறித்த மர்மப்பொருளை எடுத்து படகினுள் வைத்து சோதனைக்கு உற்படுத்தியபோது குறித்த மர்மப்பொருள் வெடித்ததில் ஜேசு ரஞ்சித் என்ற மீனவர் உடல் சிதறி பலியாகியுள்ளார்.

மேலும் குறித்த படகில் இருந்த ஏ.ஏ.சித்தி பிகிராடோ (வயது-35), எம்.அகஸ்ரின் பிகிராடோ (வயது-26) ஆகிய இரு மீனவர்களும் படுகாயமடைந்ததோடு,அந்தோனி பிகிராடோ (வயது-39) என்பவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இந் நிலையில் சடலம் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, காயமடைந்தவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.