Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, September 06, 2018

புலம்பல்....!

Currently online
காத்திருக்கிறேன் நானும்
உன் வரவிற்காய்
வந்துவிடு நீயும்

ஏழை நானும்
நீ வருவாயேன்றே
நித்தம் பார்க்கின்றேன்
எங்கு சென்றாயோ

வயல் நிலங்கள்
காய்ந்தே கிடக்கிறது
எம் வயிறும்
வாடியே போகிறது
வந்து விடு
வறுமை போக்கவே

உன்னை நம்பி
கடனும் பட்டேன்
வட்டி என்றே
தினம் நானும்
உயிரையும் இழக்கின்றேன்

இறுதியாய் சொல்கின்றேன்
வந்துவிடு மழையே
இல்லையேனில் சொல்லிவிடு
என் வாழ்வை
விதைத்த நிலத்துக்கே
உரமாக்குகின்றேன் நானும்..!

 
        நன்றி 
பாரதி மைந்தன்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.