Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, September 07, 2018

ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள்....!

Currently online
நாங்கள் அநாதைகள் இல்லை
அணைத்திடும் உயிர்கள்
நாங்கள் விதவைகள் இல்லை
வித்திட்ட விதைகளின் உரங்கள்
நாங்கள் மலடிகள் இல்லை
மண்ணில் வாடாத மலர்கள்
நாங்கள் வறுமைகள் இல்லை
வாழ்வை மாற்றும் செழிமைகள்
நாங்கள் பாவிகள் இல்லை
பாசத்தின் உணர்வான பயிர்கள்

நாங்கள் வாடிய கொடிகள் இல்லை
வழிகாட்டும் மடிகள்
நாங்கள் மங்கிய விளக்கில்லை
பிரகாச வெளிச்சங்கள்
நாங்கள் பாடுகள் இல்லை
ஒளியின் மகிமை வீடுகள்
நாங்கள் கேடுகள் இல்லை
எல்லையின் கோடுகள்
நாங்கள் தீமைகள் இல்லை
நல் வாழ்வின் நன்மைகள்
நாங்கள் வேதனைகள் இல்லை
சோதனைகளை ஜெயித்தவர்கள்

நாங்கள் போலிகள் இல்லை
என்றும் நிலையான மகுடங்கள்
நாங்கள் வெறுமைகள் இல்லை
இனம் காத்திட்ட வேங்கைகள்
நாங்கள் சந்தைகள் இல்லை
ஒற்றுமையின் மந்தைகள்
நாங்கள் பகடுகள் இல்லை
பனி மழைத் துளிகள்

நாங்கள் தாழ்மைகள் இல்லை
எதிலும் மேன்மைகள்
நாங்கள் பொய்கள் இல்லை
நிலைத்திடும் உண்மைகள்
நாங்கள் கோழைகள் இல்லை
வீரத்தின் தீபங்கள்
நாங்கள் எலிகள் இல்லை
பாய்ந்திடும் புலிகள்
நாங்கள் எரிச்சல்கள் இல்லை
வாழ்க்கையின் எழுச்சிகள்

நாங்கள் புழுக்கள் இல்லை
வாழ்க்கையின் புரட்சிகள்
நாங்கள் ஆண்களின் 
அடிமைகள் இல்லை
உணர்வாய் காத்திடும் 
உண்மையின் நேசங்கள்
நாங்கள் காமத்தின் சின்னம் இல்லை
உலகை காக்கும் கண்கள்
எங்களை புரிந்திடுவீர் ஆணினமே!


             நன்றி 
கவிப்பிரியை சுஜனி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.