Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, September 05, 2018

அவளின்_பெரும்_வலி...!

Currently online
கொஞ்சும் பெண்மையல்ல 
கொஞ்சம் மென்மையாயிருந்தாள்
உடலில் ஏதோ மாற்றம் 
விழிகள் சிவக்கப்பட்டு 
இமைகள் சுருங்கப்பட்டு
உதடு காய்ந்து போயிருந்தது..-

பேச்சில் வலியின் பிம்பம் 
கனத்த நீர் மலையொன்றின்
வெடிப்பின் குரலைப் போலவே 
ஒலித்துக் கொண்டது.

முகம் வாடவில்லை 
அகத்தில் ஒருவித வலிமை
பசித்தாலும் வாலாட்டும்
வளர்ப்பு மிருகத்தைப் போல
புன்னகையோடு பேசினாள்!

கடமைகளில் தவறவில்லை
தாய்மை என்பதை
கணப்பொழுதுகளில்
விதைத்துக் கொண்டிருந்தாள்
வான் மழை பூமியை
நனைக்கும் குளிர்ச்சியைப் போல.

சில நொடிகள் வயிற்றைப்
பிடித்து அவளுக்குள் கதறுவாள்
நான் அவள் மேனியை
வருடிக் கொண்டிருந்தேன்
எந்தப் பக்கம் வீசினாலும்
அவளை விட்டுப் போகவில்லை.

மூன்று நாட்களின் வலி
என்று சிலர் நினைத்துவிடக்கூடும்
அது பொய்யான தகவல் 
அவள் மீது நான் காற்றாகி
கலந்துகொண்டேன்.

கனவிலும் சிறைக் கைதியானேன்
பெண்மையின் பெருமையை
உணர்ந்து உறக்கம் கலைந்து 
உறைந்து விட்டேன் 
பனி மழையை போர்த்திய
பாறையின் வெட்கமாய்....!

               நன்றி 
வன்னியூர் கிறுக்கன்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.