Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, September 01, 2018

ஒரு_இருளுக்கு_பின்_வெளிச்சமே_இல்லையா..?

Currently online
வாழ்வென்பது அனிச்சையாய் ஆக்கப்படும்போதெல்லாம்
வெளிச்சமென்பதொரு குறியீட்டின் நிறம்
மிகச்சிறியதாய் மங்கிப்போகிறது

நாங்கள் ஒரு தவறிற்குப் பிறகு
ஒரு நோயின் பொழுது
ஒரு அவமானத்தின் பிறகு
கறுப்பெனும் பிரம்மாண்ட இருண்மைக்குள்
அத்தனை சுகங்களும்
தூர்ந்துபோய்விட்டதாய் தீர்க்கமாய்
நம்புகிறோம்

ஆனால் அது அப்படியல்ல
ஒரு பரீட்சைக்கு முந்தைய தூக்கமில்லா இரவுகளைப்போல
வாழ்க்கை எங்களை சோதித்துப்பார்க்கிறது

மரணமென்பதொரு பெரும் உண்மையை
எப்படி அடிக்கடி மறந்து போகிறீர்கள்...?
அது சிலர்பின் நண்டுக்கால்களால்....
சிலர்பின் தவளைக்கால்களால்.....
சிலர்பின் சிறுத்தைக்கால்களால்.....
நகர்ந்தபடிதான் இருக்கிறது

வாழ்தல் என்பது மரணத்தை நோக்கியதுதான் இல்லையா..?
ஆகவே நிமிடங்களில் படிந்திருக்கிற
நெருஞ்சி முட்களை அகற்றுவது பற்றி
சிந்தியுங்களென்கிறேன்
நெருஞ்சி தாண்டி நெருப்பில் குதிக்கவல்ல

ஒரு காதல் முறிவுக்கு பிறகு வேறு காதல் இல்லையா..?
ஒரு கால் இழந்த பிறகு பொய்க் கால் இல்லையா...?
ஒரு வைத்தியசாலை நிராகரித்தால்
வேறு மருந்துகள் இல்லையா..?
ஒரு நிராகரிப்புக்கு பிறகு எல்லாமே
முடிந்து போய்விடுகிறதா..?
காமமோ,காதலோ குறிப்பிட்ட காலம்
மட்டுமா..?
பணமோ, புகழோ ஒரு முறை மட்டும் வருபவைதானா..?

ஒரு இருளுக்கு பிறகு வெளிச்சமே இல்லையா..?

உடைந்து போய்விடாதீர்கள்..!
மரணம் சிறுத்தைக்கால்களால் நடந்தால்
அதை நண்டுக்கால் ஆக்க முயற்சித்தவாறு நகருங்கள்
மரணம் ஒன்றை விட்டு மற்றத் துயரங்களை மறுதலித்துவிடுங்கள்

இந்த வாழ்க்கை
இந்த நிமிடங்கள் மகிழ்ச்சிக்காகவே படைக்கப்பட்டவை
மகிழ்ந்திருங்கள்...!


        நன்றி 
#அனாதியன்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.