Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, September 06, 2018

விதையிட்ட_மரங்களின்_நிலைமை...!

Currently online
விதையிட்ட மரங்களை 
வீதிக்குத் தள்ளி முளைவிட்ட
துளிர்கள் மூச்சு விடுகிறது 
ஆணி வேர்களை அறுத்துவிட்ட
மரங்கள் மீண்டும் எழுந்து 
துளிர் விட்டு வளர்ந்திடுமா ?

பெற்றவர் நிலைமையை 
பற்றிப்பிடிய (டி) டா 
வியர்வையில் களமாடி
வித்திட்ட மரங்களை 
வீதியில் விட்டு பலருக்கு 
வேடிக்கையா காட்டுகிறாய் ?

குண்டுமழை பொழிந்த வேளை
உன் உடலை நெஞ்சில் வைத்து 
உயிர் காத்தான் மறந்தாயோ ?
அவன் பசியை மறைத்துவிட்டு
கிழிந்த உடை மடித்துக்கட்டி
வேளைக்கு விதம் உணவு
ஆடைக்குக் குறைவில்லை

பள்ளி செல்லும் போதினிலே
பத்து ரூபாய் கையில் தந்து 
பக்குவமாய் சென்றுவா என
பாச முத்தம் தந்தவனாய் வழி 
அனுப்பி வைப்பானே மறந்தாயா நீ ?

குடிசையில் வளர்த்தாலும்
மின்னிப் பொங்கும் 
தங்கம (டி) டா தந்தை 
தாலாட்டை மறந்தாயோ ?
கரம் பிடித்து நடை பழக
கால் வலிக்குதப்பா என நீ கதற
தோள்மீது சுமந்த புகுழ் மறந்தாயோ ?

பணம் வேணும் என
ஒரு வார்த்தை கேட்டவுடன்
இருப்பதைக் கொடுத்துவிடும்
தந்தை மனம் மறந்தாயோ ?
குடிசையில் பிறந்த உன்னை
மாளிகையில் படிக்க வைத்தான்
அவர் உடலை தினமும் உருக்கி
உன் உயர்வை தான் வளர்த்தான்
அவர் தியாகம் ஏன் மறந்தாய் ?

தந்தை தன்மை நீயும் வர
வளர்ந்திடுவான் உன் பிள்ளை 
நரை முடி தாண்டிவிட 
உயர்ந்திடுவான் உன் பிள்ளை 
கணவன் (மனைவி) பிள்ளை வந்தவுடன் 
பணத் திமிரும் பிடித்தவுடன் 
பக்குவத்தை இழந்திடுவான்
பாசத்தை மறந்திடுவான்

அன்று வீதியிலும் இடமில்லை 
பாதியிலே பாயின்றி 
அநாதையாய் படுத்திருப்பாய்
தாயிடம் நீ கேள்
தந்தை புகழ் உரைப்பாள்
தந்தையின் தியாகம் 
தாய்க்கு மேல் அறிவாயோ நீ ?

உன் சிந்தையில் தீ வை
இல்லை நிந்தைகள் கூடும் 
புரிந்திடு தந்தை புகழ்
மறந்துவிடு எளிய செயல்...!

               நன்றி 
வன்னியூர் கிறுக்கன்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.