Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, September 05, 2018

யாழில் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினருக்கு காதலியால் வந்த விபரீதம்!

Currently online
யாழில் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை மானிப்பாய் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



கடந்த 6 மாத காலமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் தலைமறைவாக இருந்த குறித்த சந்தேக நபரை பொலிஸார் தேடி வந்துள்ளனர்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி நிலோஜன் என்னும் 23 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு, வன்முறை மற்றும் களவுச் சம்பவங்களுடன் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்குவில் பகுதியில் உள்ள தனது காதலியை பார்ப்பதற்கென நேற்று சென்ற போது மானிப்பாய் பொலிஸாரால் புகையிரத  நிலையத்தில் வைத்து  குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் வருவதை இரகசிய தகவலொன்றின் மூலம் அறிந்து கொண்ட மனிப்பாய் பொலிஸார் விரைவாக செயற்பட்டு இவரை கைது செய்ததுடன் இவரிடமிருந்து கூரிய ஆயுதம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.