Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, September 01, 2018

வேறு வழியற்று அம்மாவுக்கு ஒரு கடிதம்!

Currently online
இன்றோடு பத்து வருடமாகியது நான் வெளி நாடு வந்து

இன்றும் என் சொந்த ஊருக்கு வர எனக்கு ஆசையில்லை
அந்த ஆசையை நீங்கள் இன்றும் உருவாக்கி தரவில்லை

கடன் என்று உணர்ந்துதான் வீட்டில் இருந்து புறப்பட்டேன்
பத்து வருடமாச்சு அம்மா 
ஒவ்வொரு மாத இறுதியிலும் கடன் என்று சொல்லி காசு கேட்கிறீர்கள்

உங்களுக்காய் என் வாழ்க்கையை தொலைத்ததது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பாக்கியம்

மறுபடியும் உன் வயிற்றில்த்தான் பிறப்பேன் அம்மா
உன் கடனுக்காய் நானே உழைக்க வேண்டும் அம்மா

என்னால் இனியும் இங்கிருந்து இயங்க முடியாது
கடன் தொகையை கணக்கு கூட்டி மொத்தமாய் அனுப்பி வையுங்கள்

உங்கள் கடனுக்கும் என் வாழ்க்கைக்கும் முற்று புள்ளி வைக்க வேண்டும்

என் உயிரை யாருக்காவது விற்று
பணமாய் அனுப்பி வைக்கிறேன்
மொத்த கடனையும் கழித்து வாழ்க்கையில் இன்பமாய் இருங்கள்

இந்த பத்து வருடமாய் உங்களுக்காய் வாழ்ந்தது மகிழ்ச்சி

உங்கள் தொல்லையால் நான் இறக்கவில்லை

வெளி நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளையையும் பெற்றவர் புரிய வேண்டும் என்பதற்காய் என் உயிரை பணத்திற்காய் அர்ப்பணிக்கிறேன்

இந்த பத்து வருடத்தில் வீட்டுக்கு வர எனக்கான பயணத்தை நீங்கள் உருவாக்கி தரவில்லையென்பதுதான் வேதனை!

               நன்றி 
-ஆழக்கடலில் ஒரு கவிஞன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.