Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, September 01, 2018

வாழ்வு தேடும் நெஞ்சங்கள்..!

Currently online
கருவை தேடும் நெஞ்சம் ஒன்று
மலடி என்றே மிஞ்ச இங்கு
சுமந்தாள் அறியா பிஞ்சு நின்று
சுடு வெயில் பிச்சை தேடல் எதுவோ?

கொண்டானின் துணை இழந்து
கொண்டோடி வாழ்வில் நொந்து
விதவை மொழி ஒவ்வொன்றும்
தேடல் கொண்ட விடியல் எதுவோ?

தள்ளாட ஒற்றைப் பொல் துணையாக
காப்பகத்தில் கருகி விழி சிந்தி
கதவிடுக்கில் சாய்ந்து பார்வை தூவி
காத்திருக்கும் தேடல் விடை எதுவோ?

குட்டி ஓலை குடிசை பிணியில்
வெட்டி விறகு வேர்வை பிழிய
ஒற்றை பிள்ளை வயிறு நனைக்கும்
ஒருத்தி இவளின் தேடல் எதுவோ?

நெஞ்சம் எல்லாம் கனவை சுமந்து
மாலையிடும் கோலம் வரைந்து
தனித்திருக்கும் வறுமை மகள்
வளர்த்தவனின் வாசல்படி தேடல் எதுவோ?

சொந்த மண்ணில் சன்னம் கிழிக்க
அங்கம் இழந்து அநாதையாய் அலைந்து
தங்கத் தலைவன் தானைகள் பொங்கி
இன்னும் தேடும் விடுதலை எதுவோ?

படைத்தான் பம்பர ஞாலம் பாவிமகன்
ஏக்கம் தாக்கி கதற நெஞ்சம் 
மாற்றம் அற்ற தேடலில் அசைந்து
நோக்கம் வாழ்வு ஒன்றாக இங்கு.


      நன்றி 
சுஜா. தவம்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.