Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 29, 2018

ரணிலின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 10ஆக குறைப்பு !!!

Currently online
கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவோடிரவாக பிரதமராக கடமையாற்றிய ரணில் விக்ரமசிங்க  ஜனாதிபதி மைத்திரிபாலவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரை அலரி மாளிகையிலிருந்து வெளியறுமாறும், அவரது பாதுகாப்பினைக் குறைக்குமாறும் மஹிந்தவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்து வந்தார்.

எனினும் சபாநாயகர் கரூ ஜயசூரிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் புதிய நபர் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படும் வரை நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அனுகூலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதமொன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் நேற்று இரவு முதல் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தவரவின் கட்டளையின் கீழ் 1008ஆக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 10ஆக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.