Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 11, 2018

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (11.10.2018)

Currently online
மேஷம்
எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பை ஏற்பீர்கள். நட்பால் ஆதாயமடையும் நாள். 

ரிஷபம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள். 

மிதுனம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். 

கடகம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறு வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.   

சிம்மம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.  

கன்னி
கணவன்-மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். தோற்றப் பொலிவுக்கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள். 

துலாம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்கவேண்டி சூழ்நிலை உருவாகும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். 

விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்துப்போகும். யாரையும் எடுத்தெரிந்து பேச வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள். 

தனுசு
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல்போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு ஆலோசனை தருவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். 

மகரம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள். 

கும்பம்
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புத்துணர்ச்சிபெருகும் நாள். 

மீனம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.  
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.