Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 12, 2018

விமானியின் சாதுர்யத்தால் அதிஸ்ரவசமாக உயிர் தப்பிய 136 பயணிகள் !!!

Currently online
ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் டவரில் உரசிச் சென்று விபத்து ஏற்பட்டது. எனினும் 136 பயணிகளும் அதிஷ்ரவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய்க்கு 136 பயணிகளுடன் புறப்பட்டது. 

புறப்பட்ட உடனேயே, விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைந்த உயரத்தில் பறந்தது. இதனால் விமானத்தின் சக்கரங்கள் 5 அடி உயர சுற்றுச்சுவர் மற்றும் அருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்திலும் உரசி சென்றுள்ளது.
     
விமானியின் சாதுர்யத்தால் விமானத்தில் பயணித்த 136 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

பின்னர் அந்த விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. சுவரில் உரசியதால் விமானத்தின் பின் பகுதியில் சிராய்ப்பு மற்றும் சேதம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

 இதையடுத்து பயணிகள் அனைவரும் துபாய் செல்ல வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

விமானி மற்றும் துணை விமானியிடம் தகவல்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.