Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 30, 2018

பிரித்தானியாவில் 14 வயது சிறுமி திடீரென பரிதாபமாக பலி !!!

Currently online
பிரித்தானியாவில் 14 வயது சிறுமி ஒருவர்  திடீரென ஏற்பட்ட மாறுதல்களால் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சிகிச்சைக்கு சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து சிறுமியின் தாய் சாரா கூறுகையில், எனக்கு அலிசை சேர்ந்து 19, 12 மற்றும் 6 வயதில் 4 குழந்தைகள் உள்ளனர்.

இச் சிறுமி பிறந்தது முதலே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.  மேலும் அவருக்கு ஆட்டிசம், பார்வை குறைபாடு மற்றும் ஹைபரோமொபிலிட்டி நோய்கள் இருந்தது. இதனால் சிறிய குழந்தை போலவே எப்பொழுதும் விளையாடி கொண்டிருந்தாள்.

14 வயதை கடந்தும் சிறுமியை போல இருந்தாள். அவளுக்கு சுரப்பிகள் சரியாக ஹார்மோனை உற்பத்தி செய்யாததால், அவளுக்கு தினமும் ஹார்மோன் ஊசி போட்டு வந்தோம்.

இந்த நிலையில் அவள், திடீரென சிரித்துக்கொண்டும், பாடல் பாடிக்கொண்டும் இருந்தாள். அவளை வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டு சென்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து பார்க்குமாறு அவளுடைய வைத்திய ஆலோசகர் கூறியிருந்தார்.

இதற்கமைய நாங்களும் வைத்தியசாலைக்கு சென்றோம். அங்கு ஸ்கேன் செய்வதற்கு முன்பு அவளுக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அவளுடைய இதயம், சீரான அளவை தாண்டி அதிகமான முறை துடிக்க ஆரம்பித்தது.

உடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தது. உடனே குழந்தைகள் நல வைத்தியசாலைக்கு அலைசாவை கொண்டு சென்றோம். அங்கு அனுமதிக்கப்பட்ட 72 மணிநேரத்தில் அவள் இறந்துவிட்டாள்.

பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர்கள், அவளுடைய இதயம் 14 வயது குழந்தையின் இதயத்தை விட வலிமையிழந்து காணப்பட்டதாக கூறினார். அவளுடைய வலது ஆரிக்கிள் பாதிக்கப்பட்டிருந்ததாலே இந்த சோக சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சாரா, பெற்றோர்கள் யாரேனும் குழந்தைகளுக்கு மயக்கமருந்து கொடுத்தால், அதற்கு முன்னதாக அவர்களுடைய இதயம் சீராக உள்ளதா என்பதை பரிசோதனை செய்த பின்னர் கொடுங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.