Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 08, 2018

வாள் முனையில் அச்சுறுத்தி 18 பவுண் நகைகள் கொள்ளை ; யாழில் சம்பவம் !!!

Currently online
ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சுமார் பத்துக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் ஒன்று இன்று அதிகாலை முகத்தை துணியினால் மூடியவாறு வாள்களுடன்  மதில் பாய்ந்து வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் யன்னல் வழியாக வாள்களை காட்டி கதவைத் திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

இதன்போது வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட கதவினை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த குறித்த கும்பல் சுமார் 18 பவுண் நகைகள், 4000 ரூபா ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

கூக்குரல் கேட்டு வந்த அயலவர்களையும் குறித்த கும்பல் அச்சுறுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார்  முன்னெடுத்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.