Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 30, 2018

மன்னார் மனித புதைகுழி மனித எச்சங்கள் 200 ஆக உயர்வு !!!

Currently online
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  முழுமையான மனித எச்சங்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இதுவரை 199 முழுமையான தனி மனித எச்சங்கள் அகற்றப்பட்டு, பொதிசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினம் திங்கட்கிழமை 96 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்தப் பணிகள் மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஐா மேற்பார்வையில் சட்டவைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ச தலைமையில்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வுப் பணிகளில் இதுவரை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 207 தனி முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 199 எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு பொதிசெய்யப்பட்டுள்ளன.

மேலும் நேற்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகும் மூத்த சட்டத்தரணி, அகழ்வுப் பணியை கண்காணித்ததுடன் அதன் நிலமைகளை அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பாக உள்ள சட்டவைத்திய அதிகாரியிடம் கேட்டறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.