Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 30, 2018

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (30.10.2018)

Currently online
மேஷம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

ரிஷபம்
கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உடல் நலம் சீராகும். வியா பாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.     

மிதுனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். போராட்டமான நாள்.  

கடகம்
சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டாம். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.  

சிம்மம்
தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து  உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சிறப்பான நாள். 

கன்னி
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். 

துலாம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். 

விருச்சிகம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.  

தனுசு
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 

மகரம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்ட றிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக் கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். 

மீனம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக் கும். உழைப்பால் உயரும் நாள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.