Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 12, 2018

48 மணிநேரத்துக்கு இணையத்தள சேவை முடங்க வாய்ப்பு ; ரஷ்யா எச்சரிக்கை !!

Currently online
உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையத்தள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.

தி இண்டர்நெட் கார்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர் என அழைக்கப்படும் சர்வதேச இணையத்தள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல்வேறு இணையத்தள சர்வர்களும் தொடர்பு இழக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

அதுபோலவே இணைப்பு கிடைக்காமல் தவிக்கும் சூழல் ஏற்படும். சமீபகாலமாக இணையத்தளங்களில் புகுந்து மர்ப நபர்கள் முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையடுத்து ‘சைபர் அட்டாக்’ இணையத்தள முடக்கம் செய்ய முடியாமல் தடுக்க டிஎன்எஸ் எனப்படும் ‘டொமைன் நேம் சிஸ்டம்’ நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான விரிவான பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதால் இவை முழுமையாக முடிவடைய 48 மணிநேரங்கள் வரை ஆகலாம் என தெரிகிறது. 

இந்த சமயத்தில் இணையத்தள சேவை முடங்குவதுடன், குறிப்பிட்ட இணையத்தள பக்கங்களை பார்க்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.