Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 26, 2018

மெஸன்ஜர் 4 செயலி ; புதிய அப்டேட் விரைவில் !!!

Currently online
பேஸ்புக் நிறுவனம் புதிய மெஸன்ஜர் 4 செயலியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய அப்டேட் இல் மெஸன்ஜர் செயலி, புது பொலிவுடன் பயனர்கள் எளிமையாகப் பயன்படுத்தும் விதம் உருவாக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய மெஸன்ஜர் 4 இல் வெறும் 3 டேப்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் படி ஒரு டேப் இல் கமரா சேவை இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் டேப் இல் பீப்பில் டேப் வழங்கப்பட்டுள்ளது மற்றும் மூன்றாவது டேப்பாக டிஸ்கவர் டேப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கலர் கிரேடியன்ட் என்ற புதிய சேவையும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தி உங்களின் சாட்களை வகைப்படுத்தி பிரித்துக்கொள்ளலாம்.

இத்துடன் புதிய மெஸன்ஜர் 4 செயலியில் மியூசிக் சேர்க்கும் புதிய சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டோரிக்களில் மியூசிக் பயனர்கள் மியூசிக் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தச் சேவையை உங்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களில் சேர்க்க மியூசிக் ஸ்டிக்கர் ஐகான்னை கிளிக் செய்து உங்களுக்குப் பிடித்த பாடலைத் தேர்வு செய்தால் போதும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.