Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 11, 2018

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் விழுந்த வாகனம் ; 5 பேர் பலி !!!

Currently online
மினி லாரி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மலைவாழ் மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து கோவை மாவட்டம், வால்பாறையில் இடம்பெற்றுள்ளது.

குருமலை காட்டுபட்டி மலைவாழ்மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 18 பேர் கோட்டூர் சந்தையில் பொருட்களை வாங்கி கொண்டு மினி லாரியில் வால்பாறை வழியாக திரும்பிக் கொண்டிருந்தனர். 

இந் நிலையில் காடம்பாறை அருகே வந்தபோது மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த சுவற்றில் மோதில் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மலைகிராமங்களில் உரிய போக்குவரத்து வசதி இல்லாததால், அவர்கள் மினி வேன்களில் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இதேவேளை மினி லாரியை இயக்கிய ராஜனுக்கு, ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது, மருத்துவ வசதிகள் இல்லாததால் நிறைய உயிர் இழப்பு ஏற்படுகிறது என்றும், தாங்கள் வசிக்கும் பகுதியில் மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

அத்துடன் சாலையை சீரமைத்து தருமாறும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.