Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 12, 2018

யாழில் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது !!!

Currently online
சரவணை கிழக்கு வேலணை ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்த நபர் ஒருவர் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளினை மாற்ற முற்பட்ட போது  யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு போலி நாணயத்தாளினை மாற்ற முற்பட்ட நபரை  உப பொலிஸ் பரிசோதகர் அனில்குமாரவின் தலைமையிலான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ; குறித்த நபர் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள  வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடையில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளினை மாற்ற முற்பட்ட போது இது தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பட்டுள்ளது

இதையடுத்து குறித்த கடைக்கு சென்ற பொலிஸார் அந்த நபர் மாற்ற முற்பட்ட 5 ஆயிரம் ரூபா தாள் ஒன்றினையும், அதனுடன் இணைந்து பேர்சுக்குள் இருந்து மேலும் ஒரு போலி 5 ஆயிரம் ரூபா தாளியினையும் கைப்பற்றியுள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.