Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

குஜராத்தில் 6 பேர் வெட்டிக் கொலை !!

Currently online
குஜராத்தில் பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான தகராறில் 6 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் குச் மாவட்டத்தில் உள்ள சாஸ்ராகிராமத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. 

இதில் பெண் ஒருவர் வெற்றி பெற்று கிராமப் பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த தரப்புக்கும் இடையே அங்கு அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

இந் நிலையில், நேற்று முன்தினம் இரவு இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 6 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.