Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 13, 2018

இலங்கையில் கோர விபத்து ; ஒருவர் பலி, 80 பேர் காயம் !!

Currently online
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 80 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர புதிய பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று நண்பகல் 12 மணியளவில்இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ் விபத்து தொடர்பில் தெரியவருவதாவது ; வெல்லவாய பிரதான வீதியில், மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் தெஹியத்த கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர்  மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து விபத்தில் காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர மற்றும் தெவரவெவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 80 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன், இவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.