Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 09, 2018

இயற்கை அனர்த்தத்தால் 9 பேர் உயிரிழப்பு, 49 ஆயிரம் பேர் பாதிப்பு !!

Currently online
நாட்டின் பல பாகங்களில் சீரற்ற காலநிலை நிலவி வருவதால் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த 9 பேரில் 6 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

12 ஆயிரத்து 400ற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரம் பேர் குறித்த இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 350 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

அடைமழையால் களுத்துறை, காலி, கொழும்பு மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு இடம்பெற்றுள்ளது. 

எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாவை வழங்க தேசிய காப்புறுதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.