Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 09, 2018

இரத்தப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி !!

Currently online
வவுனியா கோவில்குளம் பகுதியில் வசித்துவரும் மாணவன் ஒருவன் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 173 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

குறித்த மாணவன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவில் தரம் ஐந்தில் கல்வி கற்று வந்த சிவநேசன் விதுசன் என்பவராவார். இவர் சித்திரம் வரைவதிலும் அபார திறமையுடையவராவர்.

தந்தையின் பராமரிப்பிலும் உறவினர்களின் பங்களிப்பிலும் இரத்தப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் தற்போது மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

மாணவன் வேறு தொற்றுக்கு உட்படாமல் வைத்தியர்களின் தீவிர அவதானத்துடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.