Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

ஆளுநருக்கும் ஆவா குழுவுக்கும் தொடர்புகள் உள்ளதா? முதலமைச்சர் கேள்வி !!

Currently online
நல்லூர் இராஜேஸ்வரி மண்டபத்தில் நேற்றையதினம் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கில் பாரியளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் ஆவாக் குழுவை 3 மாதங்களில் அடக்குவேன் என்று ஐரோப்பாவில் கூறியுள்ளார்.

எமது ஆட்சி நடந்த 5 ஆண்டுகளில் அவர் ஏன் அதனைச் செய்யவில்லை. அப்போ ஆளுநருக்கும் ஆவாக்குழுவுக்கு தொடர்புகள் உள்ளதா? என முதலமைச்சர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்  அவர் ஆழமான நீச்சல் தடாகத்தில் குதித்து நீச்சல் செய்யும் நீச்சல் வீரனின் மனநிலையில் தற்போது நான் உள்ளேன். 5 ஆண்டுகளுக்கு முன் வடக்கு மாகாணசபையில் ஒரு வேட்பாளராக என்னை நிறுத்தியபோதும் இந்த மனநிலையில்தான் நான் இருந்தேன்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அஞ்சல் ஓட்டம் போன்றது. அதனை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். அல்லது அடுத்த தலைமுறையிடம் நாம் கையளிக்கவேண்டும். இவ்வாறு பல கருத்துக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.