Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 13, 2018

திருமண ஆசை நிறைவேறாததால் தந்தையின் உயிரைப் பறித்த மகன் !!

Currently online
திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மகன் ஒருவர் பெற்ற தந்தையை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த கோபி (35) என்ற இளைஞன் தனக்கு வயதாகிக்கொண்டே போகிறது விரைவில் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது பெற்றோரிடம்  கூறியுள்ளார். 

இளைஞனின் பெற்றோரும் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால் ஜாதகம் செட் ஆகவில்லை.

இந் நிலையில் இளைஞன் தந்தையிடம் தனது திருமணம் குறித்து சண்டையிட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியுள்ளது.

ஒரு கட்டத்தில் இளைஞன் தனது தந்தையின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இளைஞனை கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.