Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 13, 2018

அநுராதபுர சிறைச்சாலையைச் சென்றடைந்த யாழ் பல்கலை மாணவர்களின் நடைபவனி !!

Currently online
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி அநுராதபுர சிறைச்சாலையைச் சென்றடைந்துள்ளது.

அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி அரசு விடுதலை செய்யவேண்டுமென்ற கருத்தை முன்வைத்து தமது பல்கலைக்கழக முன்றலில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (09.10.2018) அன்று நடை பயணத்தை ஆரம்பித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வெய்யில் மற்றும் கடும் மழை மத்தியிலும் சோர்வடையாமல் மனம் தளராது இன்றைய தினம் (13.05.2018) அநுராதபுர சிறைச்சாலையைச் சென்றடைந்துள்ளனர்.

இந் நிலையில் சிறைச்சாலைக்கு முன்பாக கைதிகளை விடுதலை செய் விடுதலை செய் என்ற கோசங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.