Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 10, 2018

வரதட்சணை கொடுமை ; மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற கணவன் !!!

Currently online
வரதட்சணைக் கொடுமையில் மனைவியை கணவன் எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் வாசன் நகரைச் சேர்ந்தவன் கிஷோர். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயநந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந் நிலையில் கிஷோர் தன் மனைவியிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 10 லட்சம் கொடுக்காவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என கூறி தன் குடும்பத்தினரோடு சேர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

பணத்தாசை பிடித்த கிஷோர் நேற்று ஜெயந்தினியை அரிவாளால் வெட்டியுள்ளார். அத்துடன் அவர் மீது  மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்த முயன்றுள்ளார். இதனால் ஜெயந்தினி அலறியுள்ளார்.

ஜெயந்தினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் கிஷோரிடமும் அவனின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணத்தாசை பிடித்த கிஷோருக்கும் அவனது குடும்பத்தாருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.