Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

தீபாவளியன்று ரிலீஸாகிறது ''சர்கார்'' ; செம கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள் !!

Currently online
'சர்கார்' படத்தின் ரிலீஸ் திகதி வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

நடிகர் விஜய்-ன் 62-வது திரைப்படமான இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்திற்கு தனிக்கை குழு 'U/A' சான்றிதழ் வழங்கியுள்ளது. அத்துடன் இப்படம் வரும் தீபாவளி அன்று நவம்பர் 6ம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று ‘மெர்சல்’ படம் ரிலீஸானது. ‘சர்கார்’ படமும் தீபாவளியன்றே ரிலீஸாவதால், ரசிகர்களின் உற்சாகம் பெருகியிருக்கிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.