Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 10, 2018

வெடித்துச் சிதறிய ஆயுதக் கிடங்கு ; பத்தாயிரம் பேர் வெளியேற்றம் !!

Currently online
உக்ரைன் நாட்டில் உள்ள செர்னிகாவ் என்னும் இடத்தில் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதால் பத்தாயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இராணுவத்துக்குச் சொந்தமான வெடிமருந்து, வெடிகுண்டுகள் ஆகியன உக்ரைனின் வடபகுதியில் செர்னிகாவ் என்னுமிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் இன்று அதிகாலை வெடித்துச் சிதறியுள்ளன. இதனால் அப்பகுதியில் இருந்த பத்தாயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இதேவேளை தொடர்ந்தும் அப் பகுதியில் வெடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருப்பதால் வெடிபொருள் கிடங்கில் இருந்து இருபது கிலோமீற்றர் சுற்றளவில் வீதிப்போக்குவரத்து, ரயில்போக்குவரத்து, விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.