Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 26, 2018

ஜப்பான் செல்லவுள்ளார் இந்தியப் பிரதமர் மோடி !!

Currently online
ஜப்பான் நாட்டில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் செல்லவுள்ளார்.

இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வருடாந்த மாநாடு எதிர்வரும் 28-ம் திகதி ஆரம்பமாகிறது. 

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டின்போது, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக, இருதரப்பு உறவு, பிராந்திய பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.