Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 29, 2018

இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் மாயம் !!!

Currently online
விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியதாக தகவல் ஒன்று  வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகர்டாவிலிருந்து பங்கல் பினாங்குக்கு புறப்பட்ட பயணிகள் விமானமே இவ்வாறு  நொறுங்கியுள்ளது.

குறித்த விமானம்  தலைநகர் ஜகர்டாவிலிருந்து பங்கல் பினாங்குக்கு புறப்பட்ட  13 வது நிமிடத்தில் மாயமானது. இதையடுத்து விமானியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.குறித்த விமானத்தில் 200 பேர் வரை பயணம் செய்யலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியாவின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விமானம் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும்  இந்த தகவலை தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் யூசிப் லதீப் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.