இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட இளைஞன் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் கடந்த 8ஆம் திகதி கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் அதிகவேக ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதில் இளைஞனின் உடல் இரண்டாக பிரிந்துள்ளது.
இதையடுத்து இளைஞனின் சடலம் கனேமுல்லை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனினும் அடுத்த நாள் காலை வரை ரயில் நிலைய பொறுப்பதிகாரியினால், மரண பரிசோதகரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் சிரமத்திற்குள்ளான அதிகாரி ரயில் நிலையத்தில் உள்ள நாய்களிடம் இருந்து விடியும் வரை சடலத்தை பாதுகாத்துள்ளார்.
அடுத்த நாள் தொழிலுக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்த இளைஞர்கள் ரயில் நிலையத்தில் இருந்த சடத்துடன் செல்பி புகைப்படம் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனை அவதானித்த இளம் பெண் ஒருவர் ரயில் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
காதல் பிரிவால் தற்கொலை செய்து இரண்டு துண்டுகளான சடலத்துடன் செல்பி எடுக்கும் அளவிற்கு இந்த சமுதாயம் வக்கிரமான நிலையை அடைந்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.