Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 11, 2018

தனிமையான நிமிடங்கள்.............!!!!!! கூடலூர் சிந்துஷன்

Currently online
வழிமாறிய பயணங்களாய்
இலை சொரிந்த மரங்களாய்
சிறகொடிந்த பறவையாய்
கலையிழந்த ஓவியமாய்
தனிமைத்தீவினிலே
தனியாக தவிக்கின்றேன்.

என் நிழல்கூட அருகில் வர
அஞ்சுகிறது 
கடிகாரமுள்ளின் சத்தம்
பீரங்கியாய் இடிக்கிறது
சுவற்றின்மேல் பல்லி
ஊர்கேட்க சிரிக்கிறது 
புண்பட்ட என்னிதயம்
ஏதேதோ புலம்புகிறது.

சோலைமலர்களெல்லாம்
முகத்தை திருப்பியே முணுமுக்கிறது
தென்றல்க்காற்றும் 
நெருப்பாக எரிக்கிறது
யன்னல் நிலவும்
அனலாய்க் கொதிக்கிறது
இருள் சூழ்ந்த என் இரவு
இரக்கமின்றி நீள்கிறது.

இரத்தம் சொட்டாமல்
பெரும் யுத்தம் நடக்கிறது 
கண்ணீர் மட்டுமே 
ஆறுதல் சொல்கிறது
ஈற்றில் தனிமையே என்னை
தழுவிக்கொள்கிறது.

         நன்றி 
கூடலூர் சிந்துஷன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.