Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 08, 2018

விஜயகலா மகேஸ்வரன் கைது !!

Currently online
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது விஜயகலா மகேஸ்வரன் வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் கருத்து தெரிவித்திருந்தார். 

அவர் கூறிய இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில், இன்று வாக்குமூலம் ஒன்றை வழங்கச் சென்ற நிலையில் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.