Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 27, 2018

தினம் காணாமல்த்தான் போகின்றோம்............!! கூடலூர் சிந்துஷன்

Currently online
குருதி படிந்த தேசத்திலே
கூனிச்செயல்கள் நடக்கிறதே
தட்டிக்கேட்க யாருமின்றி
தறிகெட்டுப் போகிறதே!

உணவின்றிப் பல நாட்கள்
உணர்வின்றிச் சில நாட்கள்
உரிமைக்காய்ப் போராடி
உயிரற்றே வாடுகின்றோம்!

தூக்கம் மறந்த விழிகளாய்
துயரம் நிறைந்த மனங்களாய்
துரோகச்சதி வலையினால்
துரத்திய துன்பம் கொஞ்சமா!

காய்ந்துபோன சருகாகி
காற்றின் வழி பறந்தோம்
கந்தகப் புகையினாலே
கருகிப்போய்க் கிடந்தோம்!

சோலைவனமாய் இருந்த தேசம்
பாலைவனமாய் மாறக்கண்டோம்
பாவப்பட்ட பூமியிலே தினம்
பாசத்தையும் தொலைத்தே நடந்தோம்!

கனவுகள் தீயில் வேக
காற்றிலே கண்ணீர் மறைய
கணைகள் துளைத்த மண்ணில்
காணமல்த்தான் போகின்றோம்!!!

           நன்றி
கூடலூர் சிந்துஷன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.