Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 10, 2018

வரலட்சுமியின் வாழ்நாள் கனவுகளை நிறைவேற்றிய சர்கார் !!

Currently online
நடிகை வரலட்சுமி சரத்குமார், சர்கார் படத்தில் நடித்ததன் மூலம் தனது 4 வாழ்நாள் கனவு ஒரே படத்தில் நிறைவேறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து சர்கார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.  வில்லி கதாப்பாத்திரத்தில் வரலட்சுமி  நடித்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி உள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது. 

இந்நிலையில், சர்கார் படத்தின் நடித்ததன் மூலம் தனது 4 வாழ்நாள் கனவு ஒரே படத்தில் நிறைவேறிவிட்டதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து வரலட்சுமி கூறுகையில், 
சர்கார் படத்தில் நடித்ததன் மூலம் விஜய் சாருடன் நடிப்பது, முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிப்பது, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிப்பது என என் 4 வாழ்நாள் கனவுகள் ஒரே படத்தில் நினைவாகியுள்ளது எனவும் படத்தை தியேட்டரில் மட்டும் பாருங்க, திருட்டு சிடி.,யில் பார்க்காதீங்க.’ எனவும் கூறியுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.