Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 11, 2018

இடியப்ப பிரியாணி செய்யலாமா ??

Currently online
தேவையான பொருட்கள் 
உதிர்த்த இடியப்பம் - 2 கப் 
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
கரம் மசாலா - 1 தேக்கரண்டி 
பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி 
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
உப்பு - 1/2 தேக்கரண்டி          

தாளிக்க 
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி 
நெய் - 2 மேசைக்கரண்டி 
பட்டை - 1 இன்ச் அளவு 
கராம்பு - 2
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை 

வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கராம்பு போட்டு தாளிக்கவும்.

தாளித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து சுருள வதக்கவும். தக்காளி சுருண்டு வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.  

பச்சை வாடை போனதும் உதிர்த்து வைத்துள்ள இடியப்பத்துடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

சுவையான இடியப்ப பிரியாணி ரெடி.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.