Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 08, 2018

ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ; முதல்வர் வசுந்தரா ராஜே !!

Currently online
ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி ராஜஸ்தானில் ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ராஜஸ்தானில் தற்போது முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. 

தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஆளும் பாஜகவும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ராஜஸ்தானின் அஜ்மீரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் முதல்வர் வசுந்தரா ராஜே நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இந்த திட்டம் வரும் நவம்பர் முதல் அமலுக்கு வரும். இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் குறித்து மாநில மின் வாரிய துறை மூத்த அதிகாரிகள் கூறியபோது, "நேரடி மானியத் திட்டத்தின் கீழ் இலவச மின்சாரம் விநியோகிக்கப்படும். இதன்படி விவசாயிகள் முதலில் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். அவர்கள் செலுத்திய தொகை அரசு தரப்பில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.833 விவசாயிகளுக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்தனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.