Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 29, 2018

டெல்லியில் தற்கொலை செய்த ஐ. ஏ. எஸ் மாணவியின் உடல் சொந்த ஊரில் தகனம் !!!

Currently online
இன்று அதிகாலை டெல்லியில் தற்கொலை செய்த ஐஏஎஸ் மாணவியின் உடல் சொந்த ஊரான ஆலாம்பாளையத்தில் தகனம் செய்யப்பட்டது. கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

ஐஏஎஸ் மாணவியான மதி கடந்த 6 மாதங்களாக தனி
யார் மகளிர் விடுதியில் தங்கியிருந்து  பயின்று வந்துள்ளார். அவர் தனது அறையில் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில், கரோல் பாக் போலீசார் சென்று மதியின் உடலை ஆர். எம். எல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். 

தற்கொலை செய்வதற்கு முன்பாக, மதி ஒரு கடிதத்தை எழுதி அவரது அறையில் வைத்திருந்தார். போலீசார் சோதனை நடத்தி கடிதத்தை கைப்பற்றினர். அதில், ‘எனக்கு டெல்லி சூழல் பிடிக்கவில்லை. சொந்த பிரச்னைக்காக தற்கொலை செய்து கொள்கிறேன்.

இது எனது தவறுதான். தம்பியை நல்லமுறையில் பார்த்துக்கொள்ளவும்’ என குறிப்பிட்டிருந்தார். 
கடந்த 15 நாட்களாக மதி ஐ. ஏ. எஸ். அகாடமிக்கு செல்லவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக நவம்பர் 6ம் தேதி தமிழகம் திரும்ப ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இதனிடையே, மதியின் பெற்றோர், உறவினர்கள் நேற்று டெல்லி மருத்துவமனைக்கு சென்றனர்.

மகளின் சடலத்தை கண்டு கதறி அழுதனர். 

பிேரத பரிேசாதனக்குப்பின் மதியின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து சடலத்துடன் விமானத்தில் புறப்பட்டனர்.

இன்று அதிகாலை 1 மணிக்கு விமானம் கோவை வந்தது. பீளமேடு விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சடலம் 3 மணிக்கு ஆலாம்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. வீட்டு முன்பு அதிகாலையிலேயே கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், மலர் வியாபாரிகள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

மதியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். குடும்பத்தினர் கதறி அழுதனர்.4 மணியளவில், அங்குள்ள சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. மதி மறைவால் கிராமமே சோகமானது. 

மதியின் தாயார் மகாதேவி கூறுகையில், ‘‘எனது மகள் கடந்த 6 மாதங்களாக இங்கு படித்து வந்தார். பிரச்சனை எதுவும் இருப்பதாக எங்களிடம் தெரிவிக்கவில்லை. எங்களது உறவினரான காந்திகுமார் என்பவர் டெல்லியில் ஐ. ஏ. எஸ்.திகாரியாக உள்ளார். அவரது மேற்பார்வையில்தான் படித்து வந்தார்.அவரிடத்திலும் மதி எதுவும் கூறவில்லை. நேற்று மதியம்தான் செல்போனில் என்னிடம் பேசினாள்.அப்போதும் இயல்பாகத்தான் பேசினாள்’’ என்று கண்ணீருடன் கூறியமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.