Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

தமிழ் தந்த துணிவு...............!!!!!!! கவிப்புயல் சரண்

Currently online
அடக்கிய போது
எந்தன் கைகளை
முறித்திட்டாலும்

அடிமைகள் என்று
சொல்லி வாயிலே
குத்தினாலும்

முறுக்கியே காலை
எந்தன் முதுகிலே
முட்டினாலும்

விழிகளை வெளியே
தோண்டி வியாபாரம்
பண்ணினாலும்

நரம்பினை அறுத்து
மண்ணில் குருதியை
பெருக்கினாலும்

கருவிகள் கொண்டு
எந்தன் கனவுகள்
தொலைத்திட்டாலும்

அடங்கிட மறுத்தேன்
என்று ஆட்களை
அனுப்பினாலும்

அடிக்கு மேல் அடி
அடித்து என் ஆண்மையை
கரைத்திட்டாலும்

அஞ்சுதல் அறியான்
என்றும் அடங்கிட மறுப்பான்
நெஞ்சில் வஞ்சினம் முழக்கு
கவியால் நஞ்சரை மிதிப்பான்
என்று சொல்லிடு தமிழே
உந்தன் அஞ்சுதல் அறியா
குருதி நெஞ்சிலே ஓடுதென்று

விழித்தெழு தமிழே
என்று நஞ்சினர்
வீழும் மட்டும் உரைத்திடும்
எந்தன் குரல்
ஒருபோதும்ஒய்ந்திடாது ...

         நன்றி
கவிப்புயல் சரண்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.