Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 27, 2018

ஆண்களே! மீசை தாடி வளரவில்லையா? கவலையை விடுங்க!!!

Currently online
ஆண்களின் வீரத்தை பறைசாற்றுவதாக கருதப்படும் மீசை மிகவும் முக்கியமானதாக பல ஆண்களால் கருதப்படுகிறது.

ஒரு சிலருக்கு மட்டுமே இவை விரைவில் வளர கூடும். பல ஆண்களுக்கு இவை வளராமலே இருந்து விடும். அத்தகைய வகையில் மீசை மற்றும் தாடி வளரவில்லை என்றால் அது அவபெயரை அவர்களுக்கு ஏற்படுத்த கூடியதாக பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.

இவை வளராததற்கு பல்வேறு காரணிகளை மருத்துவ ஆய்வில் கூறுகின்றனர். இந்த பதிவில் மீசை மற்றும் தாடியை கிடுகிடுவென வளர வழி செய்யும் எளிய வகை காய்கறிகள் மற்றும் பழங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

வாழைப்பழம்

வாழைப்பழம் எண்ணற்ற பொட்டாசியம் கொண்ட வாழைப்பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால் விரைவில் மீசையின் முடிகள் வளருமாம். மீசை மற்றும் தாடியில் முடி வளர சிரமப்படும் ஆண்களுக்கு இவை அருமையான தீர்வு. இவற்றுடன் முடி உதிர்ந்து வழுக்கை ஆவதையும் இவை தடுக்கிறது.

ஆரஞ்ச் 

முடியின் வளர்ச்சிக்கு நன்கு உதவும் இந்த கனிதான் உங்கள் மீசை பிரச்சினைக்கும் முற்றுபுள்ளி வைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி மீசையின் வளர்ச்சியை ஊக்குவித்து, கருகருவென வளர செய்யும். மேலும், இவற்றில் beta-carotene மற்றும் flavonoids இருப்பதால் தாடியை அழகாக வளர செய்யும்.

நெல்லி

முடி பிரச்சினை அனைத்திற்கும் அருமையான தீர்வு தரும் அற்புத கனி இந்த நெல்லி. இவை ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை செம்மைப்படுத்துகிறது. மேலும், நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் மிக குறுகிய காலத்திலே மீசை மற்றும் தாடியின் முடிகள் வளர்ந்து அழகு பெற செய்யும்.


பிளம்ஸ்

Bioflavonoid என்ற முக்கிய ஊட்டசத்தை கொண்டுள்ள இந்த பிளம்ஸ்கள் உங்களின் தாடிக்கு உற்ற நண்பனாக திகழ்கிறது. இனிமையான இந்த பிளம்ஸை சாப்பிட்டு வந்தால் தாடி மற்றும் மீசை வளராமல் அவதிப்படும் ஆண்களுக்கு கூடிய விரைவிலேயே இவை வளர தொடங்கும்.

ஆப்பிள் 

தாடியின் வளர்ச்சிக்கு இந்த ஆப்பிள் நல்ல முறையில் உதவுகிறது. தினமும் ஆப்பிள் சாப்பிடும் ஆண்கள் உடல் ஆரோக்கியதுடன் மீசை மற்றும் தாடியின் ஆரோக்கியத்திற்கும் வழி செய்கிறது. இவற்றில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் கொண்டிருப்பதால் பல வித நன்மைகளை இது மீசைக்கு தருகிறது.
ஸ்ட்ராவ்பெரிஸ் 

பார்ப்பதற்கே செக்கச்சிவந்த நிறத்தில் உள்ள இந்த பழத்தின் அருமையை முதலில் அறிந்து உண்ணுங்கள். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி அதிகம் இதில் இருப்பதால் தாடி முடிகளை அடர்த்தியாக வளர செய்யும். மேலும், கருப்பான மீசையை இது வளர செய்யும்.

கரட் 

கண்ணுக்கு எந்த அளவில் கேரட் நலம் தருகின்றதோ அதே அளவிற்கு இவை மீசை மற்றும் முடியின் நலனுக்கும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் எ, பீட்டா கரோடின் போன்றவை தாடி முடியின் வளர்ச்சிக்கு முக்கியமாக தேவையானது. மேலும், பயோட்டின் இதில் இருப்பதால் முடியின் வளர்ச்சிக்கும் பெரிதும் இது உதவும். 

பூசணிக்காய் 

மீசை வளர்ச்சி குறைவாக உள்ள ஆண்கள் தங்களின் உணவில் இந்த பூசணிக்காயை சேர்த்து கொள்வது நலம் தரும். பல ஆண்கள் இவற்றை வெறுத்து தள்ளுகிறார்கள். வைட்டமின் சி, பி, எ, போன்றவை இதில் அதிகம் உள்ளது. மேலும் மீசையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் beta-carotene முக்கியமாக நிறைந்துள்ளது. எனவே பூசணியை தவிர்க்காமல் உண்ணுங்கள் நண்பர்களே.

வள்ளிக்கிழங்கு

எளிமையாக கிடைக்க கூடிய இந்த சர்க்கரை வள்ளிகிழங்கு மீசையின் ஆரோக்கியத்திற்கு நலனை தருகிறதாம். காப்பர், மக்னீஸ், பொட்டசியம், நார்ச்சத்துக்கள் இவற்றில் அதிகம் உள்ளதாம் மீசை வளர்ச்சிக்கு வள்ளிக்கிழங்கு பெரிதும் பயன்படும். 

முளைக்கீரை

இப்போதெல்லாம் அதிக பேர் கீரையை விரும்பி சாப்பிட ஆரம்பித்துள்ளனர். இவற்றில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மீசை மற்றும் தாடி நன்கு வளரும். இவற்றில் வைட்டமின் எ அதிகம் உள்ளதால், முகத்தின் திசுக்களை மென்மையாக்கி, தாடி முடிகள் உடைதல், உதிர்தல் போன்ற பிரச்சினைகளை தடுக்கும். 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.