Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 12, 2018

நடுவானில் வெடித்து சிதறிய ரொக்கெட் ; உயிர் தப்பிய விண்வெளி வீரர்கள் !!!

Currently online
ரஷ்யாவை சேர்ந்த ரொக்கெட் ஒன்று 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு சுமந்து செல்லும்போது நடுவானில் வெடித்து சிதறி உள்ளது.  

ரஷ்ய ரொக்கெட் நிக் ஹாக் என்ற அமெரிக்கரையும், அலெக்சி ஒவ்சினின் என்ற ரஷ்யரையும் சுமந்து கொண்டு, விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நோக்கி சென்றுள்ளது.

ரஷ்யாவின் சோயுஸ் - ஏஃப்ஜி ரொக்கெட்டின் உதவியுடன் இந்த இருவரும் விண்ணை நோக்கி அனுப்பப்பட்டனர். கஜகஸ்தானில் உள்ள சர்வதேச விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இவர்கள் அனுப்பப்பட்டனர்.

இந் நிலையில் நேற்று விண்ணில் ஏவப்பட்ட இந்த ரொக்கெட் 50 கிலோ மீட்டர் தூரம் சென்ற சமயத்தில் பாதியில் வெடித்துள்ளது. 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் ரொக்கெட் வேகமாக பூமியை நோக்கி விழுந்துள்ளது. ஆனால் ரொக்கெட் வெடித்தவுடன், அதற்குள் இருந்த கேப்ஸ்யூல் வெளியானது. இந்த கேப்ஸ்யூலில்தான் இரண்டு வீரர்களும் இருந்தனர். இவர்கள் இதற்குள் பாதுகாப்பாக இருந்தனர். இதையடுத்து கேப்ஸ்யூல் வேகமாக பூமியை நோக்கி வந்தது. இது அனைத்து விதமான சேதங்களையும் தாங்குமளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பூமிக்கு அருகில் வந்தவுடன் இந்த கேப்ஸ்யூலின் பாராசூட் திறந்தது. இதனால் இந்த கேப்ஸ்யூலின் வேகம் குறைந்தது. இதனால் அந்த கேப்ஸ்யூல் பாதுகாப்பாக தரையிறங்கியது. 

இருவரும் தற்போது மருத்துவ பரிசோதனை முடிந்து நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.