Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 13, 2018

மீண்டும் நயன்தாராவுடன் இணைந்த யோகிபாபு !!

Currently online

நயன்தாராவின் ஐரா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். 

இயக்குனர் சர்ஜன் இயக்கும் படம் ஐரா. இப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஹாரர் த்ரில்லர் படமாக இப்படம் தயாராகிறது. 

ஐரா என்றால் யானைகளின் அரசன் என்று அர்த்தமாம். பல யானைகளின் அரசனாக இருக்கும் ஒரு யானையின் பலம்பொருந்தியவள் போன்ற ஒரு கதாபாத்திரம்தான் நயன்தாராவின் கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது. 

கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு பிறகு இப்படத்தில் யோகிபாபு நயன்தாராவுடன் நடிக்கிறார். யோகிபாபுவிற்கு இப்படத்தில் மிகக்குறைவான காட்சிகளே இருந்தாலும் அது மிக முக்கியமான கதாபாத்திரம் என இயக்குனர் தெரிவித்திருக்கிறார். 

ஹாரர் படங்களில் ஆங்காங்கே மழைச்சாரல் போல தூவப்பட்டிருக்கும் காமெடிபோல இப்படத்தில் இருக்காது. முழுக்க முழுக்க பயமூட்டக்கூடிய வகையில் ஹாரராகவே இருக்கும் என்கிறார் சர்ஜன். 

இப்படத்தில் கலையரசன், ஜெயப்பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விசுவாசம் திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமையை வாங்கியுள்ள கேஜேஆர் ஸ்டுடியோ இப்படத்தை கிறிஸ்மஸுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.