Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 10, 2018

பகிடிவதைக்கு உள்ளான மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !!!

Currently online
முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவன் ஒருவன் மட்டக்களப்பு - கல்வியற் கல்லூரியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கல்வியற் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவனான முல்லைத்தீவை சேர்ந்த  மனுவேல்பிள்ளை பிரதீபன் (வயது-23) என்ற இளைஞராவார்.

ஆரையம்பதியில் உள்ள கல்வியற் கல்லூரி விடுதியிலிருந்து குறித்த மாணவனின் சடலம்  நேற்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கல்லூரியில் இணையும் போது 7 பேர் கொண்ட மாணவ குழுவினால் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால் கல்லூரிக்கு செல்லமாட்டேன் எனத் தெரிவித்து வீட்டில் இருந்துள்ளார். 

ஆனால் பெற்றோர் அவரை மீண்டும் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந் நிலையில் குறித்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.